நோர்வேயில் காட்டுத்தீ பரவல் – 100 வீடுகள் தீக்கிரை
நோர்வேயில் உள்ள டிராம்மன் (Drammen) நகருக்கு அருகே நேற்று பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் சுமார் 100 வீடுகள் தீக்கரையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓஸ்லோவிலிருந்து சுமார் 50 கி.மீ (30 மைல்) தொலைவில் மேற்கே அமைந்துள்ள அப்பகுதியை அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்திருப்பதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள காணொளிகள் புலப்படுத்துகின்றன.
இருப்பினும் மேற்படி காட்டுத்தீயினால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுபதிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், தீயை அணைக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




