தெற்கு பிரான்ஸில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 10000 பேர் வெளியேற்றம்
தெற்கு பிரான்சில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால் அப்பகுதியில் இருந்து 10000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயினால் 1,500 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் டூர் டி (Tour de France) பிரான்ஸ் பந்தயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் தரை மற்றும் வான்வழியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




