சர்வதேச விசாரணையை வலியுறுத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். அதன் போது , தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக […]













