இலங்கை செய்தி

இரு தமிழர்கள் உட்பட மூவர் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் நீதிச்சேவையின் விசேட தர  அதிகாரி ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதி மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஞானேச லலித் கண்ணங்கர ஆகியோர் புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்  இன்று (23) முற்பகல் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

ஞானேச லலித் கண்ணங்கர

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை