அரசியல் இலங்கை செய்தி

அனோஜனை பாதுகாப்பதே எங்கள் இலக்கு

"சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனைப் பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எதையும் செய்ய மாட்டோம்.

“சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனைப் பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எதையும் செய்ய மாட்டோம்.

இவ்விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியையும் எமது கட்சி பெற முயற்சிக்கும்,” என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“அனோஜன் விவகாரம் தொடர்பில் சவூதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில், எமது கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பெயரை எமது கட்சி பரிந்துரைக்கின்றது.

அனோஜன் விவகாரம் குறித்து ஜனாதிபதியை நேரில் சந்திக்கவுள்ளோம். அதேபோல, இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெறுவதற்கும் தமிழரசுக்கட்சி முயற்சித்து வருகின்றது. மேலும், புலம்பெயர் தமிழர்கள் மூலமாகவும் இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் வேறு எவருக்கும் இத்தகைய சூழல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அனோஜன் விவகாரம் குறித்து நாங்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகின்றோம். மாறாக, அவருக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில் ஒருபோதும் செயற்பட மாட்டோம்,” என சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை