வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம்
வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மரியா மான்செராட் அல்வராடோ Maria Montserrat Alvarado என்பவரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாவ்லோ ரஃபினிக்குப் பதிலாக போப் லியோ XIV-ஆல் நியமிக்கப்பட்ட, மெக்சிகன்-அமெரிக்கரான இவர், EWTN நியூஸின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் துறை, திருபீடத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக செலவு பிடிக்கும் துறைகளில் ஒன்றாகும். இது பல மொழிகளில் பத்திரிகை, டிஜிட்டல், வானொலி, அச்சு மற்றும் தொலைக்காட்சி செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறது.




