இந்தியா செய்தி

ஆப்கானிஸ்தான்மீது பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நம்பகமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அந்நாடு கூறுவதை உலகம் நம்பும் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நம்பகமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அந்நாடு கூறுவதை உலகம் நம்பும் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பயங்கரவாதத்தை ஒழிக்க ஆயுதப்படைகள் உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் கூறிய கருத்து குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், “பாகிஸ்தான் தன் செயல்கள் மூலமும் உறுதியான அர்ப்பணிப்பு மூலமும் நிருபிக்க வேண்டும். பாகிஸ்தான் தான் செய்வதாகக் கூறுவதை உலகம் நம்ப வேண்டுமானால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக அது நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை பாகிஸ்தான் நம்பத்தகுந்த மற்றும் மாற்ற முடியாத வகையில் கைவிட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

இச்சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒரு சுதந்திரமான அண்டை நாட்டின் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைப்பதாகத் தெரிவித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தத் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆப்கானிஸ்தானின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் அதன் மக்களின் நலனுக்காக இந்தியாவின் ஆதரவு என்றும் தொடரும்” என்று கூறினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி