அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக இன்று போராட்டம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலம்மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 22 இற்கு எதிராக பாரிய போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் இன்று முற்பகல் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என பல தரப்பிரும் இப்போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். அதேவேளை, அரசியலமைப்பின் 22 […]













