போலந்து துப்பாக்சிச்சூடு – பயங்கரவாத செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம்
போலந்தின் கிராகோவ் நகரின் முதன்மைச் சந்தைச் சதுக்கத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பிரித்தானிய குடிமகன் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய மேற்படி சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டு விவகார அமைச்சர் மார்சின் கிர்வின்ஸ்கி Marcin Kierwiński கூறுகையில், சந்தேக நபர் தந்திரோபாய உடைகளை அணிந்திருந்ததாகவும், இராணுவ வகை துப்பாக்கியைக் கொண்டிருந்ததாகவும், தீவிர வலதுசாரி சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை சந்தேக நபரின் வீட்டில், பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் மேலும் மூன்று உடல்களைக் கண்டெடுத்திருந்தனர். அவை அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் என நம்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




