இந்திய பிரதமர் மோடி டிசம்பரில் கனடா பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
81-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள கனடா பிரதமர், ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார்.
இதன்போது கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மற்றும் பிரதமர் மோடி எப்போது கனடா வருகிறார் என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“இந்தியாவுடனான வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். இது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்.
ஏனெனில், மக்களுக்கு மக்கள், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் என பல்வேறு நிலைகளில் இந்த உறவு எங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
கடந்த G20 மாநாட்டில் இது குறித்து நானும், பிரதமர் மோடியும் பேசி இருந்தோம். எதிர்வரும் G20 மாநாட்டில் இதில் உடன்படிக்கை எட்டப்படும்.
இந்த ஆண்டுக்கான G20 மாநாடு வரும் டிசம்பரில் நடைபெற உள்ளதாக தகவல். அதற்கான பயணத்தின் போது பிரதமர் மோடி, கனடாவுக்கு வருகை தர உள்ளார்.
அதன் திகதிஇன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளேன்” என்று மார்க் கார்னி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்க் கார்னி அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கனடா சென்றிருந்தார். கடந்த மார்ச் 2025-ல் கனடா பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றிருந்தார். அவர் பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான G20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடாவில் ட்ரம்ப் தலைமையில், டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில்நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.




