உலகம் ஐரோப்பா செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து சுதந்திரம் அவசியம்: ஈரானிடம் EU வலியுறுத்து

ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து சுதந்திரம் அவசியம்: ஈரானிடம் EU வலியுறுத்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas), ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) உடன் இராஜதந்திர வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதித்ததுடன், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை (Bab al-Mandab Strait) ஆகிய இரண்டிலும் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக நடைபெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மரண தண்டனைகள் மற்றும் மரண தண்டனைத் தீர்ப்புகளின் கடுமையான அதிகரிப்பு உட்பட ஈரானுக்குள் நடக்கும் உள்நாட்டு ஒடுக்குமுறை குறித்தும்” தான் குரல் எழுப்பியதாகக் கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி