ஐரோப்பா

மின்கட்டமைப்பு மீது ரஷ்யா ஏவுகணை மழை – இருளில் மூழ்கிய உக்ரைன்

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ரஷ்யா தனது தினசரி வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை மின்சார வலையமைப்பின் மீது பொழிந்து வருவதால், உக்ரைன் ஒரு புதிய கடுமையான குளிர்காலப் போருக்குத் தயாராகி வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் 06 இலட்சம் பேரும், கார்கிவ் பிராந்தியத்தில் 2,50,000 பேரும் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை மீட்டெடுக்க நிறுவனம் பணியாற்றி வருவதாகவும், ஆனால் “தொடர்ச்சியான தாக்குதல்களால்” இந்தப் பணி சிக்கலாகியுள்ளது என்றும் மின்சார வழங்குநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்