இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியா இலங்கை செய்தி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள்: ஒப்பந்தம் கைச்சாத்து

  • October 6, 2026
  • 0 Comments

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனமும், இலங்கையின் கூட்டுறவு சம்மேளனமும் (COOPFED) இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகம் சார்ந்த விடயங்கள் குறித்தும் […]

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இல்லாத வகையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை எதிர்க்கட்சியான 'லிபரல்-நேஷனல் கூட்டணி' (Liberal-National Coalition) அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வு எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க திட்டம்

  • October 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இல்லாத வகையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை எதிர்க்கட்சியான ‘லிபரல்-நேஷனல் கூட்டணி’ (Liberal-National Coalition) அறிவித்துள்ளது. தற்காலிக மற்றும் மனிதநேய விசாக்களைக் குறைத்து, உயர் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான புதிய புலம்பெயர்வுக் கொள்கையை எதிர்க்கட்சி வெளியிட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வீட்டு வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோருக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அடுத்த நான்கு […]

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 09) கையளிப்பதற்கு கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெள்ளிக்கிழமை கையளிப்பு

  • October 6, 2026
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 09) கையளிப்பதற்கு கையளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இப்பிரேரணையில் கையொப்பமிடும் பணிகள் இன்றுஆரம்பமாகவுள்ளன. சபாநாயகருக்கு எதிராக 49 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளன என்று நாடாளுமன்ற அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இலங்கை செய்தி

துறவிக்குரிய ஆடை அகற்றம்: கைதியானார் ஞானசார தேரர்

  • October 6, 2026
  • 0 Comments

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கைது செய்வதற்கான திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், அவரது தண்டனையின் எஞ்சியுள்ள காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் பணித்தது. ஞானசார தேரருக்கு நேற்று […]

முன்னாள் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ச தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார். செய்தி

நாடு திரும்பிய கையோடு சிறப்பு சலுகையை பயன்படுத்திய சிரந்தி ராஜபக்ச

  • October 6, 2026
  • 0 Comments

முன்னாள் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ச தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இலங்கை திரும்பியுள்ளார். இவர் கடந்த 16 ஆம் திகதிஅதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார். தனது மகன் ரோஹித ராஜபக்சவின் மாமியார் ஆன் டி லிவேராவுடன் (Anne de Livera) இவர் பயணித்திருந்த போதிலும், ஆன் டி லிவேரா சில தினங்களுக்கு முன்பே நாடு திரும்பியிருந்தார். நாடு திரும்பிய சிரந்தி ராஜபக்ச , கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து […]

மெக்சிகோ எல்லையிலிருந்து அமெரிக்க பணியாளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துத் தகுந்த ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அமெரிக்க படையினர் மீது தாக்குதலா? ஆதாரம் கோருகிறது மெக்சிகோ

  • October 5, 2026
  • 0 Comments

மெக்சிகோ எல்லையிலிருந்து அமெரிக்க பணியாளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துத் தகுந்த ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தெரிவித்துள்ளார். மெக்சிகோ பகுதியிலிருந்து எல்லை கடந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் தங்களின் தேசியக் காவல் படை, இராணுவம் அல்லது கடற்படையினருக்குக் கிடைக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். மெக்சிகோவின் தமௌலிபாஸ் (Tamaulipas) மாநிலமும் அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலமும் சந்திக்கும் எல்லைப் பகுதியில், “அமெரிக்கக் […]

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேசக் கால்பந்து உலகை ஆட்டிப்படைத்த அர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (39), செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள பெனின் (Benin) அணிக்கு எதிரான நட்புரீதியான போட்டியுடன் தனது சர்வதேசக் கால்பந்து பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். செய்தி விளையாட்டு

கால்பந்து உலகின் காவிய நாயகனின் கடைசி ஆட்டம்

  • October 5, 2026
  • 0 Comments

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேசக் கால்பந்து உலகை ஆட்டிப்படைத்த அர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (39), செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள பெனின் (Benin) அணிக்கு எதிரான நட்புரீதியான போட்டியுடன் தனது சர்வதேசக் கால்பந்து பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். புவெனஸ் அயர்ஸில் உள்ள Estadio Monumental மைதானத்தில் 85,000 பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் இப்போட்டியில், மெஸ்ஸி தனது வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அல்பிசெலெஸ்ட்’ (Albiceleste) சீருடையில் இறுதி முறையாகக் களம் இறங்குகிறார். மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனைப் […]

UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) கால்பந்து தொடரின் லீக் 3, குரூப் B பிரிவில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. செய்தி விளையாட்டு

போர்க் களமாக மாறிய ஆடுகளம்: இஸ்ரேல், அயர்லாந்து வீரர்கள் முரண்பாடு

  • October 5, 2026
  • 0 Comments

UEFA நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) கால்பந்து தொடரின் லீக் 3, குரூப் B பிரிவில் நடைபெற்ற இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. செர்பியாவில் உள்ள ‘டி.எஸ்.சி அரேனா’ மைதானத்தில் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்ற போதிலும், போட்டிக் களத்தில் இரு அணி வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கும் பதற்றமும் நிலவியது. முன்னதாக செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற முதல் போட்டியில் அயர்லாந்து […]

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்குள் இரண்டு கத்திகளுடன் அத்துமீறி நுழைய முயன்று, பயங்கரவாதச் தாக்குதலுக்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்பாத்ரி (Abdullah Albadri - 34) என்பவருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் இஸ்ரேல் தூதரகம்மீது தாக்குதல் நடத்த முற்பட்டவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை

  • October 5, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்குள் இரண்டு கத்திகளுடன் அத்துமீறி நுழைய முயன்று, பயங்கரவாதச் தாக்குதலுக்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்பாத்ரி (Abdullah Albadri – 34) என்பவருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மேற்கு லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் எல்லைக்குள் நுழைய முயன்ற அல்பாத்ரியை, அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஆயுதமேந்திய […]

கடந்த ஜனவரி மாதம்  Isfahan நகரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, 4 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவருக்கு இன்று (திங்கட்கிழமை) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானின் மிசான் (Mizan) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் 

  • October 5, 2026
  • 0 Comments

கடந்த ஜனவரி மாதம்  Isfahan நகரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, 4 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவருக்கு இன்று (திங்கட்கிழமை) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானின் மிசான் (Mizan) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அலிரேஸா செபாகி (Alireza Sepahi) மற்றும் அலிரேஸா ரைசி (Alireza Raeisi) ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. “ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தமை, ஆயுதங்களை ஏந்தி கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தமை, […]