இந்தியா இலங்கை செய்தி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள்: ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனமும், இலங்கையின் கூட்டுறவு சம்மேளனமும் (COOPFED) இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகம் சார்ந்த விடயங்கள் குறித்தும் இதன்போது, இரு தரப்பினரும் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ள சந்தோஷ் ஜா, குறிப்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்தியா-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை