பிரித்தானியாவில் உள்ள RAF Fairford விமான படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது B-1 ரகப் போர்க்காலக் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா அங்கிருந்து அவசரமாகத் திரும்பப் பெற்று, மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துக் கொண்டுள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானியா விலிருந்து ‘ஆகாயப் பேய்களை’ அமெரிக்கா மீளப்பெற்றது ஏன்?

  • October 5, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள RAF Fairford விமான படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது B-1 ரகப் போர்க்காலக் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா அங்கிருந்து அவசரமாகத் திரும்பப் பெற்று, மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துக் கொண்டுள்ளது. ஈரானால் ஏதோவொரு வடிவில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இத்தளத்தின் அருகில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்கா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. […]

வவுனியா, செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

விபத்தில் இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்

  • October 5, 2026
  • 0 Comments

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சைக்கிளும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான சைக்கிள் செலுத்துனரான பெரியதம்பனைப் பகுதியைச் சேர்ந்த அருளப்பன் அருள்ராஜ் என்ற இளைஞர் என்ற சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலீபனின் சிலை, பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பாரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது திலீபனின் சிலை

  • October 5, 2026
  • 0 Comments

நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலீபனின் சிலை, பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பாரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டுப் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்த யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸார், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான அனுமதியைக் கோரியிருந்தாலும், வழக்கில் சந்தேகநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமையைக் காரணம் காட்டி நீதிமன்றம் ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்து, வழக்கை […]

இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ADB ஆராய்வு

  • October 5, 2026
  • 0 Comments

இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, 2026 ஒக்டோபர் 05 மற்றும் 06 […]

Flydubai விமானத்தின் இந்தியக் கேப்டன் சுமித் மச்சாரைத் தாக்கி, நடுவானில் விமானத்தைக் கீழே மோதி அழிக்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, தான் சாகப் பயப்படவில்லை என்றும் 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தை மோதி அழிப்பதே தனது நோக்கம் என்றும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உலகம் செய்தி

நடுவானில் நடந்த பயங்கரம்: துணை விமானி வழங்கிய பகீர் வாக்குமூலம்

  • October 5, 2026
  • 0 Comments

Flydubai விமானத்தின் இந்தியக் கேப்டன் சுமித் மச்சாரைத் தாக்கி, நடுவானில் விமானத்தைக் கீழே மோதி அழிக்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, தான் சாகப் பயப்படவில்லை என்றும் 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தை மோதி அழிப்பதே தனது நோக்கம் என்றும் சவூதி அரேபிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஹம்மாமி தற்போது ஐக்கிய அரபு அமீரக (UAE) […]

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் அதிகரிப்பு

  • October 5, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வெளித்துறைத் தரவுகளின்படி, எரிசக்தி செலவினத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் உயர்வே, நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை கணிசமாக விரிவடைவதற்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4.3 பில்லியன் அமெரிக்க […]

ஐ.எஸ். (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) கவலை வெளியிட்டுள்ளதுடன், அவர்கள் மனிதநேயமற்ற நடத்தையையும் மரண தண்டனையையும் எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈராக் சிறைகளில் 13 ஆஸ்திரேலியர்கள்: மரண தண்டனை அபாயம்

  • October 5, 2026
  • 0 Comments

ஐ.எஸ். (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஈராக் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) கவலை வெளியிட்டுள்ளதுடன், அவர்கள் மனிதநேயமற்ற நடத்தையையும் மரண தண்டனையையும் எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. குறித்த 13 பேரையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருமாறு ஈராக் கோரிக்கை விடுத்தபோதிலும், அவர்களைத் திரும்ப அழைத்துவர எந்த முயற்சியும் எடுக்கப்படாது என்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது. இதன் மூலம் அல்பானீசி (Albanese) அரசாங்கம் தனது […]

நீண்ட தூர ஏவுகணைகளின் சேர்க்கையால் இந்தியாவின் தற்காப்புத் திறன் பெருமளவில் மேம்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் தற்போது சுமார் 190 அணுகுண்டுகள் இருக்கக்கூடும் என்றும் ‘புல்லடின் ஆப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ (Bulletin of the Atomic Scientists) அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா செய்தி

இந்தியா வசம் 190 அணு குண்டுகள்: ஆய்வறிக்கையில் தகவல்

  • October 5, 2026
  • 0 Comments

நீண்ட தூர ஏவுகணைகளின் சேர்க்கையால் இந்தியாவின் தற்காப்புத் திறன் பெருமளவில் மேம்பட்டுள்ளதாகவும், இந்தியாவிடம் தற்போது சுமார் 190 அணுகுண்டுகள் இருக்கக்கூடும் என்றும் ‘புல்லடின் ஆப் தி அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ்’ (Bulletin of the Atomic Scientists) அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அணு ஆயுதங்களை வைத்திருப்பது மட்டுமே ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு போதுமானதல்ல; எதிரியின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளும் அவசியமாகும். அந்த வகையில், இந்தியா சக்திவாய்ந்த அணுகுண்டுகள் மற்றும் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் எனத் தவறாகக் குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் வாக்குப்பதிவு முறையைக் விமர்சித்து பதிவிட்டுள்ளமை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியா உலகம் செய்தி

குழப்பத்தில் ட்ரம்ப்: பிரேசிலை இந்தியாவாக மாற்றி சர்ச்சை

  • October 5, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்தியாவின் ஜனாதிபதி தேர்தல் எனத் தவறாகக் குறிப்பிட்டதுடன், அமெரிக்காவின் வாக்குப்பதிவு முறையைக் விமர்சித்து பதிவிட்டுள்ளமை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட டிரம்ப், “இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் இன்று 12.5 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே, அதே நாளில் முடிவுகளும் வெளியாகிவிட்டன!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க தேர்தல் முறையை […]

ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ராஜினாமா: பின்னணி என்ன?

  • October 5, 2026
  • 0 Comments

ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹமீத் போவார்ட் (Hamid Bovard) இடைக்கால அமைச்சராகப் பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒபெக் (OPEC) அமைப்பின் உறுப்பு நாடான ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சராக ஆகஸ்ட் 2024 முதல் பணியாற்றி வந்த மொஹ்சென் பக்நேஜாத், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் […]