ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் இஸ்ரேல் தூதரகம்மீது தாக்குதல் நடத்த முற்பட்டவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்குள் இரண்டு கத்திகளுடன் அத்துமீறி நுழைய முயன்று, பயங்கரவாதச் தாக்குதலுக்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்பாத்ரி (Abdullah Albadri - 34) என்பவருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்குள் இரண்டு கத்திகளுடன் அத்துமீறி நுழைய முயன்று, பயங்கரவாதச் தாக்குதலுக்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்பாத்ரி (Abdullah Albadri – 34) என்பவருக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மேற்கு லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் எல்லைக்குள் நுழைய முயன்ற அல்பாத்ரியை, அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஆயுதமேந்திய காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நோக்கிலேயே அல்பாத்ரி இத்தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தூதரகத்தின் அமைவிடத்தைக் கூகுளில் ஆராய்ந்தமை, இரண்டு கூர்மையான கத்திகளை வைத்திருந்தமை மற்றும் தான் உயிரிழக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட ‘தற்கொலைக் கடிதம்’ (Martyrdom note) ஆகியவை நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

லண்டனின் Old Bailey நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், பயங்கரவாதச் செயலுக்குத் திட்டமிட்டமை மற்றும் ஆபத்தான ஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் முறையான சிறைவாசத்துடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி