ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
கடந்த ஜனவரி மாதம் Isfahan நகரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, 4 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவருக்கு இன்று (திங்கட்கிழமை) காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானின் மிசான் (Mizan) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலிரேஸா செபாகி (Alireza Sepahi) மற்றும் அலிரேஸா ரைசி (Alireza Raeisi) ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
“ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தமை, ஆயுதங்களை ஏந்தி கடவுளுக்கு எதிராகப் போர் தொடுத்தமை, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியமை, பூமியில் ஊழல் விளைவித்தமை மற்றும் போரையோ கொலையையோ தூண்டியமை” உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் செய்தி வெளியிட்டுள்ளது.




