உலகம்

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் இன்று மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக செயற்பட்ட  ஹசன் டியோபண்ட் Hassan Dioband , ஹமீத் காசெமி  Hamid Kazemi மற்றும் ரெசா  ஜங்கானே Reza Zanganeh ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் மேற்படி மூவரி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது,

குறித்த மூவரும் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற போராட்டத்தில்,  துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், கராஜ் (Karaj) நகரில் பொதுச் சொத்துகளுக்குத் தீ வைத்ததாகவும், மின் துணை மின்நிலையம் ஒன்றைச் சேதப்படுத்தி சில பகுதிகளில் மின்சாரத் தடையை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில மாதங்களாகவே ஈரான் தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்றி வருவதாக பிரபல ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பா ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக தொடங்கிய போராட்டங்களோடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவர்களே இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்