இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
பிரபஞ்சத்தின் தீவிர நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களைக் கண்டறிந்ததற்கும், அண்டார்டிகாவில் ‘ஐஸ்கியூப்’ (IceCube) நியூட்ரினோ ஆய்வகத்தை உருவாக்க முக்கிய பங்காற்றியதற்கும் பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மின்சுமையற்ற நியூட்ரினோக்கள் பருப்பொருட்களுடன் அரிதாகவே வினைபுரிகின்றன. இதனால் காந்தப்புலங்களால் திசைமாறாமல், பிரபஞ்சத்தில் பல நூறு கோடி கிலோமீட்டர்கள் நேர்கோட்டில் பயணித்து, தாங்கள் உருவான இடத்தைப் பற்றிய தகவல்களை […]













