இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 3,475 பேர் பாதிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கையில் புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணமொன்று பதிவாகியுள்ளது. 88 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 489 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 310 பேர் 8 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

ஈரான் போர் குறித்து விரிவான பேச்சு இல்லை!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பின்போது , உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து பேசப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. குறிப்பாக ஈரான் போர் தொடர்பில் பீஜிங் ஒரு ஆக்கபூர்வமான தீர்வை வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்பினாலும், இது பற்றி விரிவாக கலந்துரையாடப்படவில்லை என தெரியவருகின்றது. ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவின் உதவியை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. ஆனால் சீனா இதில் நேரடியாக தலையிடாமல் நடுநிலை வகித்துவருகின்றது. ட்ரம்ப் சீனா வருவதற்கு முன்னர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் […]

இலங்கை செய்தி

“மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு”

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் ISOMATA Akio தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பான் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு விஜயம் செய்தார். இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அமைச்சர் ஜப்பான் தூதுவருடன் இராப்போசனத்திலும் கலந்துகொண்டார். ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு […]

உலகம் செய்தி

தைவான் விவகாரம்: ட்ரம்பிடம் சீன ஜனாதிபதி கூறியது என்ன?

  • May 14, 2026
  • 0 Comments

தைவான் விவகாரத்தை முறையாக கையாயாவிட்டால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இதன்போதே சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார் என சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. சீன – அமெரிக்க உறவுகளில் தைவான் பிரச்சினை மிக முக்கியமான விடயம் என சுட்டிக்காட்டிய ஜி […]

இலங்கை செய்தி

எரிபொருள் இறக்குமதி செலவு 6 மடங்கு அதிகரிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால் பொருளாதாரம் மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். எண்ணெய் இறக்குமதி செலவு, பெப்ரவரியில் 98 மில்லியன் டொலரிலிருந்து மார்ச்சில் 216 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 368 மில்லியன் டொலராகவும் உயர்ந்துள்ளது. மே மாத இறக்குமதி 522 மில்லியன் டொலரை […]

உலகம் செய்தி

“சிறப்பான சந்திப்பு” – ட்ரம்ப் தெரிவிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையில் இன்று (14) முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் பீஜிங்கில் உள்ள புகழ்பெற்ற சுவர்க்கக் கோவில் Temple of Heaven என்ற இடத்திற்குச் சென்றனர். அங்குதான் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலம், மிங் வம்ச காலத்தில் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டதாகும். மேற்படி சந்திப்பின்போது தைவான் விவகாரம் பற்றி பேசப்பட்டதா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பட்டது. எனினும், அவர் நேரடி பதிலை வழங்கவில்லை. […]

உலகம் செய்தி

BRICS வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் மந்திராலோசனை!

  • May 14, 2026
  • 0 Comments

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்தியாவில் முக்கிய கூட்டமொன்றை நடத்துகின்றனர். மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இக்கூட்டம் நடத்தப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் BRICS அமைப்பு செயல்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய […]

ஆஸ்திரேலியா கல்வி

“குடியுரிமை பெறும்வரை உதவித்திட்டங்கள் இல்லை” – எதிரணி தலைவரின் கடும் முன்மொழிவு!

  • May 14, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர், நாட்டின் குடியேற்றக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். முந்தைய ஆண்டில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே புதிய குடியேறிகளை அனுமதிப்பதன் மூலம் வீட்டுவசதி பற்றாக்குறையைக் குறைக்க அவர் இலக்கு வைத்துள்ளார். வெளிநாட்டினர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறும் வரை அவர்களுக்குப் பராமரிப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாட்டையும் அவர் முன்மொழிந்துள்ளார். தற்போதைய லேபர் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் டெய்லர், புதிய வீட்டுவசதி உள்கட்டமைப்பு […]

இந்தியா செய்தி

நிச்சயம் வெல்வோம்: வலைத்தளங்களில் வைரலான சீமானின் பேச்சு!

  • May 14, 2026
  • 0 Comments

“இன்று இல்லை என்றால், நாளை நிச்சயம் வெல்வோம்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி உறுப்பினர்களுடன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. சீமான்கூட அவரது தொகுதியில் தோல்வியை எதிர்கொண்டார். இவ்வாறு தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆடியோ தற்போது சமூக […]

செய்தி விளையாட்டு

வாழ்வா, சவா? மும்பையுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ்!

  • May 14, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 58 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத பஞ்சாப் அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தடுமாறி வருகின்றது. இதில் 2 ஆட்டங்களில் 210 ஓட்டங்களுக்கு மேலான இலக்கை […]