உலகம்

தென் கொரியாவின் அடையாள மண்டலத்தில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்களால் பரபரப்பு

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்ததை தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது,

இதனைத் தொடர்ந்து தென்கொரியா தனது போர் விமானங்களை அவசரமாக அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து முறைப்படி கண்டனம் தெரிவிக்க, ரஷ்யாவின் இராணுவத் தூதரை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளதாக சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள், முதலில் ரஷ்யப் போர் விமானங்களை வட கொரிய விமானங்கள் எனத் தவறாக அடையாளம் கண்டதாகவும் பின்னர் அதனை திருத்தி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த எச்சரிக்கை காரணமாக உல்லியுங் தீவில் வசிக்கும் சுமார் 9,000 பேர் குழப்பமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் ரஷ்யாவின் போர் விமானங்கள்  தென்கொரியாவின் வான்வெளியை மீறவில்லை என அந்நாட்டின் கூட்டுப் படைத் தளபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்