இலங்கை செய்தி

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்

தமிழ்த் தேசிய, சிவில் சமூக செயற்பாட்டாளரான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காலமானார்.

தமிழ்த் தேசிய, சிவில் சமூக செயற்பாட்டாளரான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காலமானார்.

சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம், எட்டு மணிநேரம் நடந்த இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மரணமாகியுள்ளார்.

சி.அ.யோதிலிங்கம் தமிழ்த் தேசிய அரசியலை வழிப்படுத்தும் ஆய்வுகள், கட்டுரைகளை எழுதியிருப்பதுடன், அரசியல் போராட்டங்கள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையக மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு சார்ந்த பெருமளவு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் ஊடாக பல ஆய்வுகளையும், ஆய்வரங்குகளையும் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை