உலகம்

டெல் அவிவிற்கான ஃப்ளைதுபாய் விமான சேவைகளை மீண்டும் தொடங்க ஏற்பாடு

இரண்டு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த டெல் அவிவிற்கான ஃப்ளைதுபாய் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய துணை விமானி ஒருவர் தலைமை விமானியைத் தாக்கியதைத் தொடர்ந்து, விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் விமான சேவைகளை மீண்டும் தொடங்க இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகேவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

இருப்பினும், விமானச் சேவைகள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

மேலும் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சேவைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்