அரசியல் இலங்கை செய்தி

ஷிரந்தி சிறையில் அடைப்பு: தமிழ் டயஸ்போராக்கள் மகிழ்ச்சி

“ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறையில் அடைத்து, பிரபாகரனால்கூட செய்ய முடியாமல்போனதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது.

“ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறையில் அடைத்து, பிரபாகரனால்கூட செய்ய முடியாமல்போனதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது.

இது அரசியல் என்பது தெரியும். அதனால் நான் மகிழ்ச்சி அடையவில்லை. தமிழ் டயஸ்போராக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.”- என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் டயஸ் போராக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோரையும் கைது செய்து உள்ளே போடுமாறு டயஸ்போராக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் இவர்களை கைது செய்யுங்கள், அப்போதுதான் வடக்கு மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெறும்.
உங்களின் (ஆளுங்கட்சியின்) செயற்பாடுகள் குறித்து டயஸ்போராக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள். அதனால் நான் மகிழ்ச்சி அடையவில்லை.” – என்றார் அர்ச்சுனா.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை