உலகம் கல்வி முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா: ஏவுகணைகள் விநியோகத்தில் இழுபறி

உக்ரைனுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 60 பெட்ரியாட் வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இதுவரை அனுமதி வழங்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

குறித்த ஏவுகணைகள் ஏற்கனவே உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை வழங்குவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் சில ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகளின் கையிருப்பில் உள்ளதுடன், உக்ரைனின் நட்பு நாடுகளால் நிதியளிக்கப்பட்டவையாகவும் உள்ளன.

குறிப்பாக, கடந்த செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த ஏவுகணைகளின் விநியோகத்திற்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உக்ரைனில் சொந்தமாக பெட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமெரிக்காவின் அனுமதியைப் பெறும் முயற்சியும் பென்டகனில் தாமதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வான் பாதுகாப்புக்கான ஏவுகணைகள் அவசரமாகத் தேவைப்படுவதாக உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

எனினும், உக்ரைனுக்கான ஆதரவு தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பென்டகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களை ரொய்ட்டர்ஸ் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், இது தொடர்பில் பென்டகனிடம் கருத்துக் கோரப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

கல்வி

கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை
கல்வி

வரும் திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான  முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த