ஐரோப்பா

பிரான்ஸில் வெப்ப அலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவு

  • August 19, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த ஜுலை மாதம் நிலவிய வெப்ப அலை காரணமாக 1,243 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை அறிவித்தது. ஜுலை 3 முதல் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில், இந்த இறப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டை தாக்கிய கோடைக்கால வெப்ப அலைக் காரணமாக பிரான்ஸில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

பிரித்தானியாவில் வெப்ப அலை காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு

  • July 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த கோடைக் காலத்தில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சமீபத்திய வெப்ப அலைக் காரணமாக 2,877 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக  மே மாதத்தில் 753 இறப்புகளும், ஜூன் மாதத்தில்  2,124 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான முழு கோடை காலத்திற்கும் பதிவான எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரிப்பாகும். இதேவேளை இந்த வருடத்தில் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

04 ஆவது வெப்ப அலைக்கு தயாராகும் பிரித்தானியா – காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை

  • July 27, 2026
  • 0 Comments

பிரித்தானியா நான்காவது வெப்ப அலைக்கு தயாராகி வருகின்ற நிலையில் காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் வெப்பநிலை வேகமாக 32-33°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த வெப்ப அலை குறுகிய காலமே நீடிக்கும் என்றும், வார இறுதிக்குள் வெப்பநிலை பரவலாக சராசரி நிலைக்குக் குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு இங்கிலாந்து அதிக வெப்பநிலையை அனுபவிக்கும் அதே வேளையில், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் […]

உலகம்

ஜப்பானில் கடும் வெப்ப அலையை சமாளிக்க தெருக்களில் கட்டுப்பட்டுள்ள ஃபிரிட்ஜ்

  • July 24, 2026
  • 0 Comments

ஜப்பானில் கோடை காலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் காணப்படும் குளிர்பான விற்பனை இயந்திரங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் உள்ளே வெப்பநிலை எப்போதும் 15°C அளவில் பராமரிக்கப்படுகிறது. ஒருவர் உள்ளே சென்று அமர்ந்தவுடன், தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று வீசி, […]

உலகம்

பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்பம் – அணு உலைகளை நிறுத்த தீர்மானம்

  • July 12, 2026
  • 0 Comments

பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்ப அலை காரணமாக, மூன்று அணு உலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் எட்டு உலைகள் குறைந்த திறனில் இயங்கி வருவதாகவும் பிரான்சின் முக்கிய எரிசக்தி வழங்குநர் இன்று அறிவித்துள்ளது. வானிலை நிலவரங்கள் காரணமாகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்குடனும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஏற்கனவே வெப்பமடைந்து வரும் ஆறுகளில் அதிகப்படியான சூடான நீரை வெளியேற்றுவதைத் தவிர்ப்பதற்காக மேற்படி முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் மின்சார உற்பத்திக்கு […]

ஐரோப்பா

“ஹாய் மம் ” – பிரித்தானியாவில் நடக்கும் நூதன மோசடி

  • July 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடும் வெப்பமான வானிலை நிலவுகின்ற நிலையில் இதனை பயன்படுத்தி நூதனமாக மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். மோசடியாளர்கள் பிள்ளைகள் போல் நடித்து பணம் பறிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்தியில், அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ‘ஹாய் மம்’ அல்லது ‘ஹாய் டாட்’ என்று தொடங்கும் ஒரு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்தி வரும். அதில், ஒரு அவசரநிலை காரணமாக ‘புதிய எண்ணுக்கு’ பதில் அனுப்புமாறு பெற்றோரிடம் கேட்கப்படும். தொடர்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மீண்டும் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு

  • July 5, 2026
  • 0 Comments

அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றொரு வெப்ப அலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அசோரஸ் தீவுகள் முதல் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் வரை உயர் அழுத்த மண்டலம் உருவாகி வருகிறது. மேலும் வார இறுதிக்குள் பிரான்ஸ் மற்றும் தெற்கு பிரிட்டன் வெப்ப அலையை எதிர்கொள்ளும். வானிலை ஆய்வு மையத்தின்படி, இங்கிலாந்தில் ஜூன் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான மாதமாகவும், ஐக்கிய இராச்சியத்தைப் […]

ஐரோப்பா

வெப்ப அலை – பிரான்ஸின் இருவேறு பகுதிகளில் காட்டுத்தீ

  • July 2, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை உலுக்கி வரும் நிலையில், பிரான்ஸின் ஆட் (Aude) பகுதியில் இன்று காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் எல்லையருகே உள்ள ஆட் பகுதியின் பெரும் பகுதியை காட்டுத்தீ ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கான  சாதகமான சூழ்நிலை இல்லை எனவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே […]

உலகம்

அமெரிக்காவை தாக்கவுள்ள வெப்பக் குவிமாடம் – 25 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

  • July 1, 2026
  • 0 Comments

வரும் ஜுலை 04 ஆம் திகதி அமெரிக்காவின் பெரும்பாலான பகதிகளை வெப்ப குவிமாடம் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது 100 டிகிரி ஃபாரன்ஹீட்டிற்கும் அதிகமான வெப்பநிலையையும், கடுமையான ஈரப்பதத்தையும் ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, வெப்பக் குவிமாடங்கள் என்பவை ஒரு வாரம் அல்லது அதற்கும் மேலாக வெப்பத்தைத் தக்கவைத்து, மேகங்கள் உருவாவதைத் தடுத்து, சாதனை அளவிலான வெப்பநிலைக்கு வழிவகுக்கும் நீடித்த உயர் அழுத்த அமைப்புகளாகும். மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம், வெப்பக் குவிமாடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை 150 […]

ஐரோப்பா செய்தி

வெப்ப அலை – பிரித்தானியாவில் நீரில் மூழ்கி 05 பேர் பலி!

  • June 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபத்திய வெப்ப அலையின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மூன்று பதின்ம வயதினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி நீர்நிலைகளில் நீராடும்போது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக  ஷ்ரூஸ்பரி பகுதியில் உள்ள செவர்ன் நதியில் இருந்து 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இவரைத் தவிர, 15 வயதுடைய சிறுவர், 69 வயது முதியவர் மற்றும் 50 வயது நிரம்பிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் […]