ஐரோப்பாவை உலுக்கிய வெப்ப அலை – 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பீடு
ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய வெப்ப அலையின் காரணமாக சுமார் 50,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே இதுவரை காலமும் வெப்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள முதல் சந்தர்ப்பம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 0.17 சதவீதம், அதாவது ஏறத்தாழ 17 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தனித்தனி ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தகவல்கள், அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிராக ஐரோப்பா எவ்வளவு பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவீன வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக 2026 ஆம் ஆண்டு இருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
இம்பீரியல் காலேஜ் லண்டன் (Imperial College London) விஞ்ஞானிகள் தலைமையில் இடம்பெற்ற ஆய்வொன்றில், கோடைகாலத்தின் அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு, காலநிலை மாற்றம் இல்லையெனில் நிகழ்ந்திருக்காது என்று தெரியவந்துள்ளது.





