ஸ்பெயினை தாக்கும் வெப்ப அலை – காட்டுத்தீ அபாயம்
ஸ்பெயினின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு வெப்பநிலையானது 43 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டின் தெற்று மற்றும் மேற்கு பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிர வெப்ப அலை காரணமாகக் காடுகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நீரேற்றத்துடன் இருக்கவும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




