பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்பம் – அணு உலைகளை நிறுத்த தீர்மானம்
பிரான்ஸை வாட்டி வதைக்கும் வெப்ப அலை காரணமாக, மூன்று அணு உலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் எட்டு உலைகள் குறைந்த திறனில் இயங்கி வருவதாகவும் பிரான்சின் முக்கிய எரிசக்தி வழங்குநர் இன்று அறிவித்துள்ளது.
வானிலை நிலவரங்கள் காரணமாகவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்குடனும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையால் ஏற்கனவே வெப்பமடைந்து வரும் ஆறுகளில் அதிகப்படியான சூடான நீரை வெளியேற்றுவதைத் தவிர்ப்பதற்காக மேற்படி முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மின்சார உற்பத்திக்கு இன்றியமையாத மின் உற்பத்தி நிலையங்கள், தங்கள் உலைகளைக் குளிர்விக்க ஆற்று நீரைப் பயன்படுத்துகின்றன; இது அந்த நீரைச் சூடாக்கி, பின்னர் மீண்டும் ஆற்றில் வெளியிடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.




