பிரித்தானியாவில் வெப்ப அலை காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு
பிரித்தானியாவில் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த கோடைக் காலத்தில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
சமீபத்திய வெப்ப அலைக் காரணமாக 2,877 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மே மாதத்தில் 753 இறப்புகளும், ஜூன் மாதத்தில் 2,124 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள், கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான முழு கோடை காலத்திற்கும் பதிவான எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரிப்பாகும்.
இதேவேளை இந்த வருடத்தில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக பல மருத்துவமனைகள் அவசரநிலையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




