ஐரோப்பா

“ஹாய் மம் ” – பிரித்தானியாவில் நடக்கும் நூதன மோசடி

பிரித்தானியாவில் கடும் வெப்பமான வானிலை நிலவுகின்ற நிலையில் இதனை பயன்படுத்தி நூதனமாக மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மோசடியாளர்கள் பிள்ளைகள் போல் நடித்து பணம் பறிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்தியில், அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ‘ஹாய் மம்’ அல்லது ‘ஹாய் டாட்’ என்று தொடங்கும் ஒரு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்தி வரும். அதில், ஒரு அவசரநிலை காரணமாக ‘புதிய எண்ணுக்கு’ பதில் அனுப்புமாறு பெற்றோரிடம் கேட்கப்படும்.

தொடர்பு ஏற்பட்டவுடன், குற்றவாளிகள் கடன் அல்லது பணப் பரிசைக் கோருவார்கள். இதற்காக, ஒரு நண்பர் என்று கூறப்படும் நபரின் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குவார்கள். இது, ஏற்கனவே உள்ள ‘ஹாய் மம்’ மோசடியின் ஒரு மாறுபட்ட தந்திரமாகும்.

இந்த மோசடியால் இங்கிலாந்தில் ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனிநபர் இழப்புகள் பெரும்பாலும் சுமார் £3,000 பவுண்ட்ஸாக உள்ளன.

இருப்பினும், சில பெற்றோர்கள் பல தவணைகளில் £47,000 பவுண்ட்ஸ் வரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக தங்கள் பிள்ளையை அவர்களின் வழக்கமான எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இணையக் குற்றவாளிகளைக் கண்டறிய உதவும் வகையில், மோசடிச் செய்திகளை 7726 என்ற சேவையை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்