வெப்ப அலை – பிரான்ஸின் இருவேறு பகுதிகளில் காட்டுத்தீ
ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை உலுக்கி வரும் நிலையில், பிரான்ஸின் ஆட் (Aude) பகுதியில் இன்று காட்டுத்தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் எல்லையருகே உள்ள ஆட் பகுதியின் பெரும் பகுதியை காட்டுத்தீ ஆக்கிரமித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலை இல்லை எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரான்ஸின் மற்றொரு பகுதியான லான்கானில் (Lancon) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த தீ கட்டுக்குள் கொண்டுரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதமிஞ்சிய வெப்ப அலையால் போராடி வரும் பிரான்ஸிற்கு காட்டுத்தீ பரவல் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.




