ஐரோப்பா

ஜெர்மனியில் MPகளின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு வழங்க முன்மொழிவு

  • June 22, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு நன்கொடையாக வழங்கக் கட்டாயப்படுத்தும் சட்டத்திருத்தம்மொன்றில் வாக்கவுள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது. சோசலிச இடதுசாரிக் கட்சி, இந்த வாக்கெடுப்பை முன்மொழிந்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சராசரி பொது சேவை சம்பளத்திற்கு இணையாகக் கணக்கிடப்பட்ட ஊதியத்தை மட்டுமே தக்கவைத்துக்கொள்வார்கள். கோடைக்காலத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி அமர்வின்போது இது தொடர்பான  வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதத்திற்கு சுமார் €11,833.47 யூரோவை ஊதியமாக பெறுகிறார். அத்துடன் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மின்னல் தாக்கம் – குழந்தை உள்பட 13 பேர் படுகாயம்

  • June 20, 2026
  • 0 Comments

ஜெர்மனி –  முன்சிங்கன் நகரின் பெரும் பகுதிகளில் நேற்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குழந்தை உள்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மின்னல் எங்கு தாக்கியது என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்று ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். பலத்த மின்னல் தாக்கத்தை தொடர்ந்து பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், 90 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெர்மனி மக்கள் பலரும் மின்னல் தாக்கம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் : ரயில் நிலையங்களே குறி!

  • June 1, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் ரயில் நிலையங்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மற்ற இடங்களை விட  ரயில் நிலையத்தில் அதிகளவிலான வன்முறை நிகழ்வதாக குற்றவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபிராங்க்பர்ட் (Frankfurt) ரயில் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகள், அதன் அண்டைப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருப்பார்கள், ஆனால் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!! வைத்தியர்கள் எச்சரிக்கை!

  • May 31, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் டெங்கு நுளம்புகள் சீராக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் (Rhine-Westphalia)  இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை, பான், யூஸ்கிர்சென் மற்றும் ரைன்-எர்ஃப்ட் மாவட்டங்களில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் வரும் மாதங்களில் இந்த வெப்பமண்டல நுளம்புகள் பெருகக்கூடும் என்று கொலோன் நகரமும் தற்போது எச்சரித்துள்ளது. இந்த நுளம்புகள் டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் வேகமாக பரப்புவதால், சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நுளம்புகள் வெப்பமான வானிலையில் வேகமாக பரவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ரயிலுடன் மோதிய பாடசாலை பேருந்து – 04 பேர் உயிரிழப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை பேருந்து ஒன்று ரயில் ஒன்றுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தை தொடர்ந்து பெல்ஜிய அவசர சேவைகள் களமிறக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோதலின் சூழ்நிலைகள் குறித்து அரசு வழக்கறிஞர்களும் தடயவியல் குழுக்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் தாக்குதலுக்கு சதித்திட்டம் : இருவர் மீது வழக்கு தாக்கல்!

  • May 22, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள யூத அமைப்புகளின் முக்கியத் தலைவர்களைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டேனிஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரும் ஈரானுக்கு ஆதரவாக மேற்படி தாக்குதல்களை முன்னெடுக்க சதித்திட்டம் தீட்ட உதவியதாக கூறப்படுகிறது. ஜெர்மன் தரவு தனியுரிமைச் சட்டங்களின்படி, டேனிஷ் நாட்டவரான அலி எஸ் (Ali S) . மற்றும் ஆப்கானிய நாட்டவரான தவாப் எம் (Tawab ⁠M) என அடையாளம் காணப்பட்டுள்ள இருவர் மீதும் கொலை […]

ஐரோப்பா

பாதுகாப்பை மேம்படுத்த ஜெர்மனி இலக்கு – 10 பில்லியன் ஒதுக்கீடு!

  • May 18, 2026
  • 0 Comments

ஜெர்மனி பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் (£8.5 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது. அவசரநிலைகள் மற்றும் சாத்தியமான தாக்குதல்களுக்கான தயார்நிலையை மேம்படுத்துவதற்காக, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய முழு அளவிலான படையெடுப்பிற்குப் பதிலளிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட ஒரு பரந்த இராணுவச் செலவின இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது பெருமளவிலான உயிரிழப்புகளுக்கான மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், 1,000 சிறப்பு வாகனங்கள் மற்றும் 110,000 […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கொள்ளை முயற்சி : வங்கி ஊழியர்கள் பணயக்கைதிகளாக பிடிப்பட்டனர்!

  • May 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் சின்சிக் நகரில் உள்ள ஒரு வங்கியில் பலரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு பணம் பறிக்கும் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில், பணத்தை கொண்டுசெல்லும் வாகன ஓட்டுநர் மற்றும் ஒரு வங்கி ஊழியர் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய சந்தேகநபர்கள் வங்கிக்கு வெளியே ஒரு ஊழியரை மிரட்டிய பின்னர், அவரை  வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்புப் படைகள் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ட்ரம்பின் அவசர முடிவால் வேலையிழக்கும் மக்கள் : ஜெர்மனியில் நெருக்கடி!

  • May 7, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து 5000 துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அந்நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராகி வருகிறது. பாதிக்கப்படும் படைப்பிரிவுகள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வில்செக்கின் ரோஸ் (Vilseck’s Rose) படைத்தளத்தில் நிலை கொண்டுள்ள துருப்புக்கள் வெளியேறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலையிழப்பு பிரச்சினையை எதிர்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதிகள், உணவகங்கள், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் – இருவர் பலி!

  • May 4, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் லீப்ஜிக் (Leipzig) நகரின் மையத்தில் மக்கள் கூட்டத்தின் மீது கார் புகுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி (Volkswagen SUV ) வாகனத்தை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மக்களுக்கு  எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து சரிபார்க்கப்படாத அறிக்கைகள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.