ஐரோப்பா

டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளை ஜெர்மனியில் நிலைநிறுத்த அமெரிக்கா பச்சைக்கொடி

டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்து அதனை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தெரிவித்துள்ளார்.

பெர்லினில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த உச்சிமாநாடு தனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் விஞ்சிவிட்டதாகவும் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.

“இதன் மூலம், நமது பாதுகாப்பில் உள்ள ஒரு முக்கியமான மூலோபாய இடைவெளியை நாங்கள் நிரப்பியுள்ளோம் எனக் கூறிய அவர், நமது சொந்த ஐரோப்பிய அமைப்புகளை உருவாக்கி அவற்றை ஐரோப்பாவில் நிலைநிறுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், ஜெர்மனியில் தனது அமெரிக்க இராணுவ இருப்பைக் குறைப்பதாக மே மாதம் அறிவித்த பிறகு, டோமஹாக் குரூஸ் ஏவுகணை கொள்வனவு தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்