ஐரோப்பா

ஜேர்மனியில் AfD கட்சிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு

ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சியின் மாநாடு இன்று இடம்பெற்ற நிலையில் அக் கட்சிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.  சுமார் 15000 பேர் இதில் கலந்துகொண்டிருக்கலாம் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது.

அவர்கள் அக்கட்சியின் மாநாட்டிற்கு செல்லும் முக்கிய சாலைகளையும் இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஜேர்மனி முழுவதும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலவரத் தடுப்பு பொலிஸார்  குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிராந்தியத் தேர்தல்களில் ஏஎஃப்டி (AfD) கட்சி பெரும்பான்மையை பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்