ஐரோப்பா

ஜெர்மனியில் MPகளின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு வழங்க முன்மொழிவு

ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தின் பெறும்பகுதியை சமூக நிதிகளுக்கு நன்கொடையாக வழங்கக் கட்டாயப்படுத்தும் சட்டத்திருத்தம்மொன்றில் வாக்கவுள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது.

சோசலிச இடதுசாரிக் கட்சி, இந்த வாக்கெடுப்பை முன்மொழிந்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சராசரி பொது சேவை சம்பளத்திற்கு இணையாகக் கணக்கிடப்பட்ட ஊதியத்தை மட்டுமே தக்கவைத்துக்கொள்வார்கள்.

கோடைக்காலத்தில் இடம்பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி அமர்வின்போது இது தொடர்பான  வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதத்திற்கு சுமார் €11,833.47 யூரோவை ஊதியமாக பெறுகிறார். அத்துடன் பொதுச் செலவுகளுக்காக €5,467 யூரோ வழங்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய முன்மொழிவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக வரியை செலுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த முன்மொழிவிற்கு  குறைந்த அளவிலான  உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த முன்மொழிவு திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற வாய்ப்பளிக்கும் என்றும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் வழக்கமான சம்பளத்தில் திறம்படச் செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்