ஐரோப்பா

ரஷ்யாவுக்கு போர் பயிற்சி – சீன தூதரை சந்திக்க ஜேர்மனி கோரிக்கை

ரஷ்ய வீரர்களுக்கு சீனா பயிற்சி அளிப்பதாக வரும் செய்திகள் தொடர்பாக, சீனத் தூதருடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்த ஜெர்மனி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சு இன்று இந்த தகவலை வெளியிட்டது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் பாதுகாப்பு அமைச்சரின் தனிப்பட்ட ஒப்புதலுடன், கடந்த ஆண்டு சீனா ரஷ்யப் படைகளுக்கு இரகசியமாகப் பயிற்சி அளித்ததாக ரொய்டர்ஸ் கடந்த 02 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்தே இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜேர்மனி தயாராகியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர ரஷ்யாவிற்கு உதவும் எதுவும் நமது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்,” என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சக வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆகையால், ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்புப் போருக்கு சீனாவின் தீர்க்கமான மற்றும் அதிகரித்து வரும் ஆதரவானது நமது பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்