ஜெர்மனியில் மேல்நிலை பாடசாலையொன்றில் பதற்ற நிலை
ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலையொன்றில் இன்று மாணவர் ஒருவர் இரு மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஷோங்காவில் (Schongau) உள்ள வெல்ஃபென்(Welfen) உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 வயதுடைய குறித்த மாணவர் கத்தியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் படுகாயம் அடைந்த இரு மாணவிகளும், ஆபத்தான நிலையில் இல்லை எனவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி தனியாகவே செயற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் பெற்றோர் குவிந்தமையால் பதற்றமான சூழ்நிலையும் நிலவியுள்ளது.




