வெப்ப அலைக்குப் பின்னர் ஜெர்மனியில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த மாதம் ஐரோப்பா முழுவதும் பரவிய கடும் வெப்பம், பல நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான நீர்மூழ்கி உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜெர்மனியில் ஜூன் மாதத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.
“2003 ஜூன் மாத வெப்ப அலைக்குப் பிறகு, நாட்டில் இவ்வளவு அதிகமான நீரில் மூழ்கி இறப்புகள் பதிவாகவில்லை,” என தேசிய உயிர் காக்கும் சங்கம் (DLRG) ஒரு அறிக்கையில் எழுதியுள்ளது.
அந்த அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் ஆண்கள் மற்றும் அவர்களில் பலர் 30 வயதுக்குட்பட்டவர்கள்.
“ஆண்கள் ஆபத்துக்களைக் குறைத்து மதிப்பிடுவதற்கும், இடர்களை மேற்கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
மேலும், அவர்கள் மது அல்லது பிற போதைப்பொருட்களின் தாக்கத்தில் அடிக்கடி நீருக்குள் செல்கின்றனர்,” என்று அந்த அமைப்பின் தலைவர் யூட் வோக்ட் தெரிவித்துள்ளார் .
இந்த வெப்ப அலை பிரான்சிலும் பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் லாரன்ட் நியூனெஸின் கூற்றுப்படி, ஜூன் 19 முதல் 139 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .





