பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்பு: உறுதிப்படுத்தியது சீனா
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பிலுள்ள பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், பெலாரஸ், பொலிவியா, கியூபா, கசகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகான்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய 10 நட்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புதின் பங்கேற்பார் என அந்நாடு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், சீன ஜனாதிபதியின் வருகையையும் சீனா இன்று உறுதி செய்துள்ளது.




