ஜெர்மனியில் மின்னல் தாக்கம் – குழந்தை உள்பட 13 பேர் படுகாயம்
ஜெர்மனி – முன்சிங்கன் நகரின் பெரும் பகுதிகளில் நேற்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக குழந்தை உள்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மின்னல் எங்கு தாக்கியது என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்று ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பலத்த மின்னல் தாக்கத்தை தொடர்ந்து பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், 90 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜெர்மனி மக்கள் பலரும் மின்னல் தாக்கம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




