ஐரோப்பா

பாரிஸில் மது விற்பனைக்கு தடை : ஜெர்மனி நோக்கி நகரும் வெப்ப அலை

பாரிஸில் பொது இடங்களில் மது அருந்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் பிரெஞ்சு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

வெப்ப அலையின் போது மருத்துவமனைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது இன்று நண்பகல் முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை பல நாட்களாக புழுக்கத்தில் ஆழ்த்திய வெப்ப அலை நிலைமைகள் படிபடியாக குறைந்து கிழக்கு நோக்கி நகரவிருக்கின்றன.

இந்நிலையில் ஜெர்மனியில் வசிப்போது கடுமையான வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஜெர்மனி முழுவதும் வெப்பநிலை 40°C-ஐ எட்டக்கூடும் என்றும்  செக் குடியரசின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்