ஐரோப்பா

இஸ்ரேலின் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்தது ஜேர்மனி

ஜெர்மனி  வட அட்லாண்டிக் பெருங்கடலில் இஸ்ரேலிய பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்ததாக இராணுவ அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லோரா ஏவுகணையே இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்,  நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களை வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் தீவிரமாக முயன்று வரும் நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனியிடம் தற்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் இல்லை. அவை அதன் ஆயுதக் கிடங்கில் உள்ள குரூஸ் ஏவுகணைகளை விட மிக அதிக வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை.

இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 500 கி.மீ (310 மைல்கள்) வரை செல்லும் திறன் கொண்டது என்று ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை உருவாக்கும் நோக்கில் பெர்லின் பல பன்னாட்டு ஒத்துழைப்புகளில் ஈடுபட்டுள்ளதுடன், அத்தகைய ஆயுதங்களை வாங்குவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்