ஜெர்மனியில் வெப்பத்தினால் 9,800 பேர் உயிரிழப்பு – மீண்டும் தாக்கும் வெப்ப அலை
ஜெர்மனியில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் RKI சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வெப்பநிலையானது சுமார் 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததே மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே , வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.




