ஜெர்மனியில் பாரேட் நிகழ்வில் தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
ஜெர்மனியில் பாரேட் நிகழ்வின்போது மக்கள் மீது வேன் ஒன்றை மோதி தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரியான 21 வயதுடைய இளைஞர் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பை பேணியதாக தெரியவந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தால் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல்தாரியை கைது செய்ய முயன்றபோது அவர் கூர்மையான ஆயுதத்துடன் பொலிஸாரை நோக்கி ஓடி வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ஜேர்மனின் காவல்துறை தெரிவித்துள்ளது.
பெர்லின் தீயணைப்புத் துறையினர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




