ஐரோப்பா

ஜெர்மனியில் காட்டுத்தீ அச்சுறுத்தல் – ஆவணங்களுடன் வெளியேறுமாறு உத்தரவு

ஜெர்மனி – பெல்ஜியம் எல்லையருகே காட்டுத்தீ பரவி வருகின்ற நிலையில், இன்று அதிகாலை 1800 பேரை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுமாறு நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

“கெய்” Gey கிராமத்தை விட்டு குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறி, அருகிலுள்ள ஸ்ட்ராஸ் Strass  கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்குச் செல்ல வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான மருந்துகளை மட்டும் எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பெல்ஜியம் எல்லையருகே நேற்று பரவ ஆரம்பித்த காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அதே நேரத்தில் அப்பகுதி வழியாகச் செல்லும் B399 சாலை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்