ஜெர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் – தாக்குதல்தாரிக்கு ISIS அமைப்புடன் தொடர்பு
ஜெர்மனியின் பெர்லின் நகரில் LGBTQ+ நிகழ்விற்காகக் கூடியிருந்த மக்கள் மீது வேன் ஒன்று புகுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த நிகழ்வு ஆரம்பமான சிலமணி நேரங்களிலேயே இடைநிறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தாக்குதல்தாரி தொடர்பான மேலதிக விவரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பெர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் செய்தி தொடர்பாளர், நாங்கள் இப்போது ஒரு சந்தேகப்படும் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம். இன்னும் கைது செய்யப்படாத இந்த சந்தேகப்படும் குற்றவாளிக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், இந்த சந்தேகப்படும் குற்றவாளி, பெர்லினில் உள்ள இஸ்லாமியக் குழுவின் உறுப்பினர் என்று காவல்துறைக்கு நன்கு தெரியும்,” எனக் கூறியுள்ளார்.




