ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் 21 வெடிகுண்டுகள் கண்டுப்பிடிப்பு
ஜெர்மனியின் சாக்சோனி மாநிலத்தில் 21 வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர்கள் இன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய கிழக்கு ஜெர்மனியின் கோர்லிட்ஸ் Goerlitz மாவட்டத்தில் உள்ள கிராஸ்டீன் Graustein துணை மின் நிலையத்திற்கு தெற்கே உள்ள உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகே, கையால் செய்யப்பட்ட 09 வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


