சவால்களை முறியடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் Sabalenka
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka), அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை (Taylor Townsend) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் சபலென்கா தனது சர்வீஸ்களைத் தக்கவைக்கச் சற்று சிரமப்பட்டார். நடப்பு சாம்பியனான சபலென்காவின் முதல் நான்கு சர்வீஸ் கேம்களில் மூன்றை உடைத்து (Break) டவுன்சென்ட் அதிர்ச்சித் திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார். இருப்பினும், விரைவாகத் தனது இயல்பு ஆட்டத்திற்குத் திரும்பிய சபலென்கா […]













