உலகம் செய்தி முக்கிய செய்திகள்

குற்றப் பிரேரணை கேலிக்கூத்து: அமெரிக்க பாதுகாப்பு செயலர் பதிலடி

தன்னை பதவி நீக்குவதற்கான முயற்சி கேலிக்கூத்தானது என்றும், அந்த முயற்சி நிச்சயம் தோல்வி அடையும் எனவும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் Pete Hegseth, தெரிவித்துள்ளார்.

தன்னை பதவி நீக்குவதற்கான முயற்சி கேலிக்கூத்தானது என்றும், அந்த முயற்சி நிச்சயம் தோல்வி அடையும் எனவும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் Pete Hegseth, தெரிவித்துள்ளார்.

ஈரான் போரில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தன்னைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தொடர்ந்து, பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க குடியரசுக் கட்சியின் கென்டக்கி மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் மாஸி, பீட் ஹெக்செத்துக்கு எதிராக எட்டு பதவி நீக்கக் குற்றப்பிரேரணைகளை கடந்த திங்கட்கிழமை முன்வைத்திருந்தார்.

ஈரானுக்கு எதிராக காங்கிரஸின் அனுமதியின்றி இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, ஏமன் மீதான தாக்குதல்கள், கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படும் படகுகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தப் பிரேரணைகளில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலளித்த ஹெக்செத், தனது இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமானவை எனத் தெரிவித்ததுடன், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஹெக்செத்தின் செயல்பாடுகளைப் பாராட்டிய ட்ரம்ப், அவருக்கு எதிரான பதவி நீக்க முயற்சியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், ஹெக்செத்துக்கு எதிரான பதவி நீக்க முயற்சியைத் தடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், 211 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 204 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன்படி, பதவி நீக்கக் குற்றப்பிரேரணைகளை குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதிநிதிகள் சபையின் நீதித்துறைக் குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஹெக்செத்தைப் பதவி நீக்கும் முயற்சி தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில், பதவி நீக்க முயற்சியை முன்வைத்த தோமஸ் மாஸியைத் தவிர வேறு எந்தக் குடியரசுக் கட்சி உறுப்பினரும் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

ஈரான் போர் தொடர்பான அதிருப்தி அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்ற பின்னர், ஹெக்செத்துக்கு எதிரான புதிய பதவி நீக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போரில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து வரலாறு தற்போதைய பார்வையிலிருந்து மாறுபட்ட வகையில் மதிப்பிடும் என்றும் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி